11 என்னுயிரே நீதானோ

நிறைவேறாத கனவுகள் என்றும்

என் மனதில் ஆறாத வடுவாய்

நீ யாரென்று என்னுள் தேடி அலைகிறேன்…

 

உறக்கம் வராத நாட்களில் உனக்காக

எழுதும் கவிதை கிறுக்கல்கள்…

 

என்வாழ்வின்வசந்தகால

நிகழ்வுகளின்மிகச்சிறந்தவர்ணங்களால்

என்வாழ்க்கைதீட்டப்பட

காரணமாய் இருந்த உயிரோவியம் நீ…

 

என்னை  வசீகரிக்கும் வர்ண

ஜாலங்கள் உன் விழியில் ….

 

என் உலகை மறந்தேன் உனக்குள்ளே

உன்னோடு வாழ்ந்த நாட்கள் யாவும்..

 

உன் காலை மலர்ந்ததும், என் ஞாபகங்கள்

உன்னை சுற்றி சிறகு விரிந்து பறக்கின்றன

உன் நினைவின் நதியில்

நித்தம் பயணிக்கிறேன்….

 

 

லேசான காற்று அலைகளால்

உன் முகம் முத்தமிடும் மழைத் தூறல்களாய்,

உன்ஸ்பரிசம்சிலிர்க்கச்செய்து

கவி பாடிச் செல்லும் தென்றலாய் ,

பயணித்துக் கொண்டே இருக்கிறேன்

நீ யாரென்று என் மனதில் ஆழத்தில்….

 

காலை பூத்த ரோஜாமலர்கள்

உன் கன்னம் தொட்டு நீ சிரிக்கும் போது

உணர்ந்து கொள்ளும் உன் உதட்டிதழ்  மென்மையை..

 

உன் கண்களில் வரும் கண்ணீருக்கு காரணமாய்

உன் கைகளால் கொடுக்கும் மரணத்தையே

விரும்புகிறது வெங்காயம் கூட

உன் வீட்டு சமையல் அறையில்…..

 

உன் மலர்ப்பாதம் சுமக்க ஒவ்வொரு இரவும்

தவம் செய்கின்றன உன் காலணிகள் கூட….

 

என் அகராதியில் பெண்மையின்

பெயர்க்காரணம் நீதானோ

என்று கூட சில நேரம் சிந்திக்க வைத்து விட்டாயடி….

 

உன் உருண்ட விழிகளால் எனைப்பார்த்து என்

உறக்கத்தை தொலைத்த தேவதை நீயடி…..

 

என் நாட்குறிப்பில் கருஇல்லா வெற்றுப்பக்கங்களை

உன்னைப் பற்றி மட்டும் எழுதும் கவிதைகள் ஆக்கினாய்…

என் கவிதைச் சோலையில் காதல்மலர்களை

மட்டும் பூக்கச் செய்தாயடி நீ…

ஒவ்வொரு நாளும் பூத்துக்குலுங்கும் மலராய் உன் முகம்

உன் மலர்களில் கவிதை தேனெடுக்கும் தேனீக்களாய்  என் மனது….

 

கானகத்தேதொலைந்திருப்பினும்கவலை

கொண்டிருப்பேனோ அறியவில்லை…

ஆனால்உனைக்காணாநொடிகளில்

கண் இமைக்கவும் மறந்து உன்னைத் தேடுகிறேன்….

 

கண்களாலே பேசும் மொழிகள்,

எனை நினைத்து உனை பார்க்க வைக்கும் கலைகள்,

உன் காலடிச்சுவடுகள் தொட்டு

நடக்க விரும்பும் என் கால்கள் ,

இவையாவும் கற்றுத் தந்தாயடி உன் காதல் மொழியில்..

 

உன் கை வரைந்த ஓவியங்கள்

காலத்தில் அழியாத நினைவுகளாய்

என் வீட்டு சுவற்றில் புதுப்பொலிவுடன்

பதித்துவிட்டேன், அஜந்தா எல்லோரவாய்…

என் காதல் இலக்கியங்களை தினம் பாடட்டும் என்று…

 

உன்னைப்பற்றி என்னும்போது

எல்லாவற்றிலும் முதலாவதாக ஆசைப் படுகிறேன்….

 

காலங்கள் பல சென்றாலும்

காதலுடன் உன் பிறந்தநாளை

மறவாது மனம் விரும்பி வாழ்த்து சொல்வதிலும்…

 

முன்பொழுதே நான் கண்விழித்து

நீ தூங்கும் அழகை பார்த்து ரசிப்பதிலும்….

 

சோம்பல் முகமாய் குறுநகையுடன்

உனக்குகாலைவணக்கம்சொல்வதிலும்

என்றுமே ஆசைபடுகிறேன் முதலாவதாக…

 

நீதரும்காலைத்தேநீரை

உன் கையில் முத்தமிட்டு வாங்கிப் பருகுவதும்…

 

சமைக்கத் தெரியவில்லை எனினும்,

சமயலறையில் உனக்கு உதவிகள் செய்து

உன்னைஓரக்கண்ணால்ரசிப்பதே

என் காலைப் பொழுதின் காதல் காட்சிகள்….

 

வாரவிடுமுறையில்மழைவரும்நாளில்

நீ நனைந்து விளையாட

நீதலைதுவட்டவரும்என்னை

மழை முத்துக்களோடு முத்தமிடும் காட்சி

கண்ணுக்குள்ளே நிழலாடும்….

 

சிறு பிள்ளைகளுடன் நீ விளையாடும் போது,

குழந்தையாய் மாறத் துடிக்கும் என்ன மனம்…

 

நிலவொளியில்உன்மடிமீது

தலை சாய்த்து கதைகள் பேசிய நேரம்

உன் புன்னகை முகத்தை பார்க்க, விண்மீன்கள் ஏங்கி

இந்த பூமி நோக்கி சரிய

இந்த ஜென்மம் இப்படியே தொடராதா

என்ற ஏக்கம் தோன்றிற்று முதன் முதலாய்…

 

நம்பிவிடாதே

உன்னோடு ஒரு ஜென்மம் வாழ்ந்தால் போதும்

என்று நான் கூறும் பொய்யையும்…

ஒரு ஜென்மனும் உனைப்பிரிய தோன்றாது

உன்னோடு ஒரு நாள் நான் வாழ்ந்துவிட்டால்….

 

விம்மும் போதும் தும்மும் போதும்

நீதான் நினைக்கிறாய் என எண்ணும் போது

ஆமாம் என்ற சாட்சியாய்

மீண்டும் வர மறுக்குதடி என் தேவதைப் பெண்ணே….

 

கவிதையும் இசையும் சேரும்போது தான்

இனிமை இருக்கும் தமிழில்….

என்கவிதைகளின்இசைஎன்றுமே

நீயாய் தொடர நாளும் விரும்புதடி என் மனமே…

 

எனக்கு தமிழ் மொழியின் நேசம்

என் பிறப்பால் வந்ததா, அல்லது

உன் பிறப்பால் வந்தாதா என

இன்னும் நினைத்து சிரித்துக்கொள்கிறேன்

உன்னை நினைக்கும் நொடிகளில்…

 

நாட்கள் நகர்ந்ததும் தெரியவில்லை

நாளை என்னும் சொல்லும்  அறியவில்லை, உன் நினைவால்

நம் பிரிவையும் ஏற்க முடியவில்லை என்னால்…

 

உன் பெயரை எங்கு பார்ப்பினும்,

யார்சொல்லக்  கேட்பினும், ஒரஞ்சென்று  தனியே புன்னகை புரிவதிலும்

பைத்தியக்காரனாய் சிரிப்பதிலும்

மகிழ்ச்சியடைகிறேன்  மடத்தனமாய்  இருந்தாலும்….

 

நீ சென்ற திசை  பார்த்து

என் மனம் ஏங்குதடி பெண்ணே….

தோற்றத்தால் நீ என்னை விலகிச்சென்ற

பாதை வெறுமையைத் தந்தாலும்

உன் நினைவுகள் என்றும்

இன்பமான வலியினையும், போலியான புன்னகையையும்

தருகிறது பெண்ணே, சில கண்ணீர்த்  துளிகளோடு…

 

உன் காதலன் என்ற கனவுகள் தொலைந்தாலும்

நான் உன்மேல் கொண்ட

காதல் என்றும் மறைவதில்லை என் நெஞ்சத்தில்..

 

உன்னோடு வாழ்ந்துவிட

இன்னொரு ஜென்மம் நான் ஏன் எங்க வேண்டும்…

 

உன் மடி தூங்க, முத்த மழை நனைய, உன் தோள் சாய

மறு ஜென்மம் வரை உன்னை

மறந்திருக்க முடியாதடி காதலியே…

 

ஜனனித்து விடுகிறேன் உன் முதல் குழந்தையாய் நானே…

இது காமம் அல்ல காதலியே

உனது அன்பின் பாசத்துக்காக ஏங்கும்மனது…….

 

என்னுயிரே நீதானோ!…..

 

License

கவிதையும் காதலே! Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.