13 காதலை காகிதங்களாய் கசக்கி எறிந்ததேனோ
நிலவை கூட விண்ணில் வைக்காமல்
வாரிக்கொண்டு வெற்று வானமாய்
விட்டுச் சென்றதேனோ?
நிலவைப்பார்த்துஉன்நினைவால்
சிக்கித் தவிப்பேன் என்று
கொண்டு சென்றாயோடி?
இன்று முதல்முறை நானும் வானும்
சேர்ந்தே அழுகிறோமடி..
நாளைகூட வெண்ணிலவும்
வானைப் பார்த்து திரும்பி விடக் கூடும்…
நம் காதல் மறவாமல் நீயும்
திரும்பி வருவாயோ அன்பே!!
நான் உன்னுடன் சென்ற பயணங்கள் யாவும்
பாதைகள் அற்று போனதோ அன்பே!
உன்னில் என்னைக் கொடுத்திருந்தேன்
என்னை எங்கோ தொலைதுவிட்டாயடி……
என் கவிதைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு
நம் காதலை மட்டும் வெறும்
காகிதங்களாய் கசக்கி எறிந்ததேனோ….
உனக்காய் காத்திருந்”தேன்”
உன் நின்வால் மகிழ்ந்”தேன்”
என்னும் தமிழ்த்”தேன்”களை மட்டும் தந்து விட்டு
தமிழைஉயிரற்றவெறும்வார்த்தையாக
என் வாழ்வில் விட்டுச் சென்றயோடி?
Feedback/Errata