15 ஞாபகங்களின் சாரலில்
உன் காதல் அழைப்பின் இசையில்
என் கவிதைகளை
உன் பாதையில் பயணிக்க வைத்தேனடி..
பாதி தூரம் சென்றதும்
உன் கால் தடம் கூட மண்ணில்
பதிக்காமல் காணாமல் போனாயோடி ?
உன்னைத் தொடரவும் முடியாமல்
விலகவும் தோன்றாமல்
என் கவிதைகளின் தேடல் என்றும் நீயாகவே இருக்கிறாய்..
நீ எனக்காய்த் தந்த சிறந்த பரிசுகள்
உன் ஞாபகங்கள் மட்டுமே….
ஞாபகங்களின் சாரலில்……
Feedback/Errata