16 காதல் பிரியங்கள்
உன்னுடனான என் நாட்களை
என் மகிழ்ச்சியை மட்டும் பிரதிபலிக்கும்
என் ஞாபகப் புத்தகங்களில்
பதித்து வைத்துக் கொள்கிறேன்…
உன்னோடு இருந்த நாட்களில்
உன்னைப் பிடித்திருக்கிறது என்பதை
சொல்வதா வேண்டாமா என்ற குழப்பங்களை
உருவாக்கியே என்
பொழுதுகளைக் களவாடிக் கொண்டிருக்கிறாய் நீ..
உன் முகம் பார்த்து, கண் நோக்கி
என்பிரியங்களை
பகிர நினைக்கும் தருணங்களில்
ஆண்மைக்கும் நாணமுண்டு என்பதை
அறிய வைக்கிறாயடி நீ..
என் வாழ்வின் நினைவூஞ்சளில் நீ ஆடும் போது,
என் ஞாபகப் புத்தகங்களின் பக்கங்களில் உள்ள
காய்ந்த ரோஜா மலர்களின் இதழ்கள்
மனம் வீசுவதைப் போல் உன் நினைவுப் பிரியங்கள்
மனம் வீச நான் மகிழ்ந்திருப்பேன்….
Feedback/Errata