18 திராவிட தமிழா, விழித்தெழு
உருண்டோடும் உலகம், உணர்சிகளற்ற வாழ்க்கை
மனிதம் இல்லாமனது, இவற்றின் மத்தியில்
திராவிட லட்சியம் பரப்ப எண்ணி
வழிதேடும் வழிப் போக்கனாய் நான்!
தவிப்புகளோடு தனியே வாழும்,
சாதிகள் இல்லையென்று உள்ளம் துடிக்கும்
வர்ணம் தீட்டாத நிழற்சித்திரமாய்
திராவிட வாழ்கையின் தொடக்கம் இது…
எத்திசை செல்ல, எவ்வழி நோக்க,
பாதைகளின்றி பரிதவிக்கிறேன்
இரவென்னும் சாதியை விழுங்கிய காடுகளாய்
இந்த சமூகம்….
மனிதம் மறத்தல், லட்சியம் தொலைத்தல்
மனித பாகுபாடு அறிதல், தீண்டாமை தொடர்தல்
இம்மானுட வாழ்வில் வாழ அங்கீகார காரணிகள்
அதோ அந்த சாதி எனும் பூதம்
மனிதர்களை மதியிழக்கச் செய்துவிட்டது…
ஆ, என்ன இது!…
சமுத்திரமாயினும் நீந்தி கரை கண்டிருப்பேன்
சாதி எனும் ஆகாயத் தாமரை மூடிய சமுத்திரமானதே….
கரை தெரிந்தும் கால் நகர்த்த முடியவில்லையே…
தவறென்று அறிந்தும்
சாதி என்ற கட்டமைப்பில் இருந்து
மனிதர்கள் வெளிவர மறுப்பதேனோ…..
மானிடம் தொலைத்த தமிழ் மறவர் கூட்டம்!
சாதியை காரணம் கொண்டு உலகக்கடலை
கலங்கச் செய்தவர் பல பேர்…
சாதிக்கடல் நீர்தெளியும் முன், கலங்கள் கழிகள் விட்டு
மேலும் கலங்கச் செய்யும் சில பேர்…
சாதியும் பெயரால் வேறுபட்டுக் கிடக்கும் தமிழா,
உண்ணும்உணவும், உடுக்கும்உடையும்
பல சாதிகளை கடந்து வந்துவிட்டன….
சாதியின் பெயரால் காதலை இழந்தாய்,
சாதியின் ஆதீக்கத்தால் வேலை இழந்தாய்,
கடவுளை நம்பி நிம்மதி இழக்கிறாய்,
உன் கையாளாகத்தனத்தை ஏன் கடவுளிடம் சேர்க்கிறாய்…
என்ன கற்றுத் தந்துவிட்டது உன் சாதியும் கடவுளும்
உன் வியர்வை மட்டுமே வாழ்வில் என்றும் பன்னிர் துளிதெளிக்கும்
இதில் உன்சாதியின் பங்கும், கடவுளின் பங்கும்
கால்துளி அளவும் இல்லை…
சமத்துவம் கொள்ள, திராவிடம் பயில, விழித்தெழு தமிழா…
தமிழன் என்ற அடையாளமே, உன் தேசத்தில்
மிகுந்த பெருமை.
அதை உடைத்து விடாதே ஒருநாளும், உன் வழிவந்த சாதியினால்
விழித்தெழு தமிழா, வீறுகொண்டு ஓடிவா…
வாழ்ந்து விட்டோம் பலவருடங்களாய் சாதியின் பெயரால்..
இதுவே போதும், இனி இவையனைத்தும் விட்டொழி….
சரித்திரம் படைத்திடு தமிழனாய்…
தோள்தட்டி எழுந்து நடந்திடு திராவிடனாய்……..
Feedback/Errata