20 கடவுள் இருந்திருந்தால்…
கோவில் தெருவில் பிச்சைஎடுக்கும் மனிதர்களின் வறுமையும் ,
இறைவனை தினம்வேண்டி கொட்டிதீர்க்கும் மனிதனின் கவலைகளும் ,
மனிதனை கடவுள் பெயரால் மயங்கச்செய்து அர்ச்சனை செய்யும்
அர்ச்சகர்களின் கடன் சுமைகளும் ,
என்றோ மறைந்திருக்கும் கடவுள் இருந்திருந்தால்..
கோவிலின் வாயிலில் காலணியைத் தொலைத்துவிட்டு
எடுத்தவனை சபிக்கும் இகழ்ச்சிப் பேயும்,
ஒரு பருக்கைச் சோற்றுக்காக கோவிலைச் சுற்றிவரும் கால்நடை,
பறவைகளின் பசிக் கொடுமையும்,
பலவகைப்பொருட்கள்கிடைக்கவில்லைகடைத்தெருவில்
என்ற குழந்தையின் ஏக்கமும்,
என்றோ மறைந்திருக்கும் கடவுள் இருந்திருந்தால்..
கடவுளை நம்பி செயலில்லாமல் சாதிக்கதுடிக்கும்
இளைஞனின் தோல்வியும்,
இறைவனை காணவரும் செல்வந்தனின்
பணம் சேர்க்க வேண்டும் என்ற பேராசைகளும்,
நோய் தீர்க்கவைத்தியம் பாராமல் கடவுளிடம்
குறை சொல்லும் நோயாளியின் பிணியும்,
கோவில்தெருவில் அன்றாடப்பிழைப்புக்கும் அடுத்தவேளை
சோற்றுக்கும் நடத்தும் வியாபாரியின் கவலைகளும்,
என்றோ மறைந்திருக்கும் கடவுள் இருந்திருந்தால்..
இறைவனை பூஜித்து பூக்கள் விற்கும்
பூக்காரியின் வரதட்சணை கொடுமையும்,
ஜாதகம் பொருத்தம் பரிகாரணங்களால் கல்யாணம்
தடைபட்டு போகும் முதிர்கன்னியின் சோகமும்,
முயற்சிசெய்யாமல்கடவுளைநம்பிகாத்திருக்கும்
கலைஞர்களின் கலக்கங்களும்,
சாதி மதம் பெயரால் கடவுளை கூறுபோட்டுகொண்டு
சண்டையிட்டுக்கொள்ளும் மனிதர்களின் கலகங்களும்,
என்றோமறைந்திருக்கும்
கடவுள் இருந்திருந்தால்………………………
Feedback/Errata