21 இறைவா, நாங்கள் வேண்டுவது உன் சமாதனம் அல்ல
இல்லாத கடவுளே , இருத்தும் பயன் தரா
இயற்கை அன்னையே…
உன் விளையாட்டில் இதுவும் ஒன்று
என்று கூறினால், உங்களை இப்போதே
நிராகரிக்க / எரிக்க தயார் நாங்கள்…
என் மலர்க் குழந்தைகளின்
மொட்டுக்களை மலர விரியும்போது
தீயிட்டு கருக்கியது ஏனோ?
இறக்கைகளை பயிற்று பறக்க
நினைக்கும் போது,
சிறகுகளைப் பொசுக்கியது ஏனோ?
அப்பிஞ்சுகளின் பூஞ்சிரிப்பை ஒருமுறை
கூட நீ பார்த்ததில்லையோ….
அக்குழந்தைகள் மலர்ப்பாதம் தரைமேல்
நடவும் போது உன் கன்னத்தின் முத்தமென
உன் கன்னத்தில் குழி வில சிரித்து
மகிழ்ந்தது ஏனோ பூமித்தாயே?……
மலர்களைக் கருக்கும் நெருப்புக் கங்குகளை
மனிதனைப் படைப்பதேனோ சொல்லிவிடு?…..
நாங்கள் வேண்டுவது உன் சமாதனம் அல்ல…
தீயிட்டு கொளுத்திய பிள்ளைகளுக்கான பிரார்த்தனை அல்ல
தீவிரவாதம் கொல்லப் போராடும் போர்க்குணம் அல்ல
மானுடர்களைப் படைக்கும் நீ,
மனிதத்தை கொடுக்க மறப்பதேனோ???
மனிதம் இல்லாத மலட்டு மண்டைகளைப் படைப்பதேனோ?
(Peshwar school attack by terrorists)
Feedback/Errata