24 அதைத்தான் நீயும் விரும்புகிறாயா?
என்னால் உனக்காக, நமக்காய்ப் பிறந்த
கவிதைக் குழந்தைகள் அனாதையாகபட்டுவிடும்
நம் காதலின் பிரிவினால்…
அதைத் தான் நீயும் விரும்புகிறாயா?
நீ என்னை விலகிச் சென்ற நாட்களில்
நீயும் உன் நினைவுகள் மட்டும் சூழ்ந்த உலகத்தில்
கவிதைக் கிறுக்கனாகிறேன்…
அதைத் தான் நீயும் விரும்புகிறாயா?
தூரிகையால் வண்ணங்கள் பல குழைத்து
உன்னை வரைய நினைக்கும்
ரவிவர்மன் கூட தோற்று போவானடி,
உன் பேரழகை வரைய முடியாமல்,
அதைதான் நீயும் விரும்புகிறாயா?
என் வீட்டுச் சுவற்றில்
பல்லி சொல்லும் சகுனம் கூட
நீ தரும் முத்தத்தின் சப்தங்களாய்
என்னை தூக்கத்திலும்
இன்பமடைய வைத்து இம்சிக்குதடி…
அதைதான் நீயும் விரும்பிகிறாயா?
உன் ஒரு நிமிட அணைப்பு வேண்டும்
என்பதற்காகவே எனக்கு குளிர்சுரம்
அடிக்கடி வர அடம்புடிக்குதடி…
அதைதான் நீயும் விரும்பிகிறாயா?
Feedback/Errata