3 கடைசி வரம் தருவாயா பெண்ணே!!
வரமொன்று கிடைத்தது, தவமேதும் செய்யாமல்
உன் நினைவுகளுடன் நித்தம் நடக்கும் வாய்ப்பு கிடைத்தால்
என் வாழ்க்கைப் பாதையில் நீ நடந்த காலடிச் சுவடுகள் ….
என்றும் மகிழ்ச்சிக் கடலாய் ஓயாமல்அலையடித்து
என் நினைவோடு உரசுதடி
உன் நினைவென்னும் கடலில்
ஒரு கட்டு மரம் கிடைத்த மகிழ்ச்சியில் நான் .
என் வாலிப பாலைவனம் கூட,
பூஞ்ச்சோலையானது உன் காலடிச்சுவடால்!
தமிழில் இயற்றிய இலக்கியம் கண்டு இன்புற்றேன்
உந்தன் பெயரால் என்னை பரவசமூட்ட…..
உன்னிடம் பேச வார்த்தைகள் தேடி அலைந்தேன்
உன் விழி பேசும் மொழிக்கு பதிலேதும் தெரியாமல் ….
இரவுகளின் நீளம்அன்று தான் தெரிந்தது , எனினும்
இரவு முழுவதும் நிலாவென உன் நினைவுகள்….
இயல்பான மனிதனும் கவிஞனாகிறான்
உன் முகம் பார்த்த காரணத்தால்
உயிரற்ற பொருட்கள் கூட மீண்டும் மீண்டும் பிறக்கின்றன
உன் சுவாசம் பட்ட காற்றால்
ஒருநாளி ல்வாடிடும்பூக்கள்கூடபெருமிதம் கொள்கின்றன
உன் கூந்தல் சேரும் பாக்கியம் கொண்டு
கணக்கிட்டு பார்த்தேன், உன் மேல் நான் கொண்ட காதல் எவ்வளவென்று
எப்படி உன் மேல் இவ்வளவு ஈர்ப்பு வந்ததென்று …..
என் நாட்கள் என்றும் உதிக்கின்றன, நெஞ்சில்
உன் புன்னகை மலர்ந்த முகத்தின் நினைவுகளுடன்…
என் தோட்டத்துப் பூக்களெல்லாம் ஏங்கித் தவிக்கின்றன
நீ சூடும் மலர் ஆக வேண்டுமென்று
என் வீட்டுப் பொருட்கள் எல்லாம் எதிர்பார்த்துக்கிடக்கின்றன
உன் விரல் படும் வரம் கிடைக்குமா என்று
என் வீட்டின் வழியெல்லாம் மரங்கள் பூக்கள் உதிர்த்து காத்துக்கிடகின்றன
உன் பாதம் பட்டு வாடும் மோட்சம் வேண்டும் என்று
என் வீட்டு இசைப் பொருட்கள் இன்றும் தவம் செய்கின்றன
உன் கொலுசுகளின் ஓசையில் தோற்கவேண்டும் என்று
பூஜையறை கடவுள் படங்கள் கூட மௌனமாய் யாசிக்கின்றன
உன் கைபடும் வரம் வேண்டுமென்று
ஆயினும்
முதல் காதல் என்றும் முடிவில்லாத தொடர்கதையாய்
உன் நினைவுகளோடு தினம் தவிக்கிறேன்
உந்தன் கை கோர்த்து நடக்கும் கடைசி வரம் தருவாயா பெண்ணே
இவையெல்லாம் நடக்காது என்று அறிந்திருந்தும் எந்தன்மனது
உன்னை நினைக்காமல் இருக்க மறுக்குதடி
கை சேராக் காதலாய்….
உன் நினைவுகளுடன் வாடும்…..
Feedback/Errata