6 என் பயணத்தில் ஒரு நாள்….
நினைவுகள் என்னும் இரவுகள்..
என்னுள் உன்னைப் பற்றி நிஜம் தேடும் கனவுகள்…
இசையில் மயங்கும் ஆண்களை விட
உன் விழியின் மொழியில் பதில் பேசத் தெரியா
கவிஞ்ர்களைக் கண்டேன் நேற்று…
உன்னால் உறக்கத்தை தொலைத்தேன்
எனினும் எனை நீ நினைப்பாய்
என்ற கனவுகளை மட்டும் கண்டேன் இக்கவிதையிலே
இயற்கையை வேண்டினேன்
இந்த இரவின் இயல்பை மாற்ற
உன்னைப் பார்த்த நொடி நான் இங்கு சரிய
மலைச்சாரல் உன்னை தொட்டு தவழ
நான் அதை ரசிக்க…
மனம் மயங்கும் மாயஜாலம் என்னுள்
உன் நினைவால் மட்டும்….
காண்பவனின் இதயம் திருடும்
கள்ளியாய் நீ,
உன் விழியின் ஈர்ப்பினையும், அழகின் அதிசயத்தையும்
எனையறியாமல் திருடிச் செல்கிறேன்
ஒரு நிழற்படமாய்
என் நினைவாலே ஒரு கள்வனாய் நான்….
Feedback/Errata