7 உனக்காக என் காதல் கடிதம்….

உன் சுவாசக் காற்றே,

முதல் தென்றலாய் என் காலைப் பொழுதில்…

 

உன்வளையல்ஓசை

என் மனம் விரும்பும் சங்கீதமாய்…

 

உன் புன்னகை என்றும்,

என்நாட்களைஅலங்கரிக்கும்வர்ணங்களாய்

 

உன் விரல் தொட்டு  விளையாடும் தோழனாய்…

உன் மடி மீது தவழ்ந்து விளையாடும் குழந்தையாய்..

வாழ்ந்து பார்க்க துடிக்கிறேன்..

சம்மதம் என்ற உன் புன்னகை பூவை

உதிர்த்து என் வாழ்வை

வளமாக்கு பெண்ணே, பல வர்ணங்களால்…

 

வார்த்தைகள் தேடி அலைந்து

வருத்தமுற்று திரும்புகிறேன்

உன்னை பார்த்தும் பேசாத பொழுதுகளில்..

 

உறக்கத்தை தொலைத்த நாட்களில்..

உனக்காக எழுதும் கவிதை கிறுக்கல்கள்…

 

இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்…

என் மனம் கவரும் என்னவளை விட

யாரையும் எனக்கு அழகில் பண்பில்

சிறந்தவளாய் காட்டவில்லை என்பதனால்…

 

என் இளமை என்னும் வாசலிலே

என்றும் உன் நினைவுகளின் பொன் ஊஞ்சல்..

 

மழைக்கும் ஒரு ஆனந்தம்

மழைச் சாரல் உன்மேல் தூறும் போது…

மகிழ்ச்சியாய் உன் உடல்

சிலிர்த்து மழையில் ஆடும் போது….

 

உன்னை தொட்டு விளையாடும்

தென்றலாய் நான்….

உன் மனதை மயக்கிடும்

நிலவென்னும் நினைவாய் நான்…

உன்னை தொடர்கிறேன் ஒவ்வொரு நொடியும்…

 

உன்னை வட்டமிட்டு பறக்கிறேன்

வண்ணத்து பூச்சியாய் நான்…

 

நிழல் மரங்களாய், நீ செல்லும் பாதையில்

பூக்கள் உதிர்த்து பரவசப்படுகிறேன்

உன்  நினைவை தாங்கி நிற்கிறேன்..

பூக்களை மட்டும் எடுத்துக் கொண்டு

பரவசப்படுகின்றாயே காதலி…

 

என் உயிரற்ற காதல் வார்த்தைகள் சொல்லும்

இயற்கையின் மொழி உனக்கு புரியவில்லையா…

உறக்கத்தை தொலைத்த நாட்களில்..

உனக்காக நான் எழுதும் கவிதை கிறுக்கல்கள்…

License

கவிதையும் காதலே! Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *