1 நினைவுகளில் வரும் முதல் கனிகை

பழகியதுமில்லை அதிகமாகப் பேசியதுமில்லை உன்னிடம்
ஆனால் பாத்தவுடன் பேசதூண்டும் அழகிய
பள்ளிகாலங்களின் இறுதி வருடம் இந்த வருடம்
பழகியதுமில்லை அதிகமாகப் பேசியதுமில்லை உன்னிடம்
ஆனால் பாத்தவுடன் பேசதூண்டும் அழகிய
பள்ளிகாலங்களின் இறுதி வருடம் இந்த வருடம்

பதினொன்றாம் வகுப்பு ஒரு பள்ளியில், பன்னிரெண்டாம் வகுப்பு இப்பள்ளியில்
ஏன் மாற்றம் செய்தேனோ தெரியவில்லை
கடவுள் கொடுத்த வரமோ உன்னை காண …..

இலக்கிய பெயரை கேட்டபோது என்னுள் ஒரு சுகம்
உந்தன் விழி தொடர்ந்தேன், நடை தொடர்தேன்
நீயும் என்னை பார்ப்பாய் என
எனினும் மறுத்தாய் மறைத்தாய் இன்னும் இல்லை என!

உந்தன் காந்தப் பார்வை என்மேல் பட்டபோது
நானும் காதல் வயப்பட்டேன் உன்னுள்
முப்பொழுதும் உன்னைத் தொடர்ந்தேன் என் உள்ளத்தில்
முயற்சி செய்து தொடர்ந்தேன் உன்னிடம் பேசவேண்டி

என் காலங்கள் அழகானது, கசக்கும் பாடங்கள் இனிமையானது
தேர்வு அறை முழுதும் உன் நினைவானது
வினாத்தாள்களில் வரும் தெரியாக்கேள்விகளுக்கு பதிலாய் நீ .
காரணமில்லாமல் சிரித்துக்கொண்டேன் ஒரு பைத்தியக்காரனாய்.

நீரில் நீந்தி மகிழும் நீர்ப்பறவை ஆனேன், வானில் மிதக்கும் விண்கலனை ஆனந்தித்தேன்
நினைவில் நிலவினை நிகர் செய்து பார்த்தேன் உன் முகத்தோடு
உந்தன் மேல் மயக்கத்தோடு நிலவும் சொன்னது,
இந்தப் பாவை முன் நானும் தோற்றேன் என்று….

தினமும் சிரித்தாய் உன் தோழிகளுடன்
ஆனாலும் மறைத்தாய் எனைப்பார்க்கும் பொழுது
உன் தமிழ்ப் பெயரை கிறுக்கி திரிந்தேன் என் புத்தகங்களில்
FLAMES போட்டு பார்த்தேன் பல வண்ணங்களில்….

மனம் சொக்கிப் போனேன் முதல் முறை நீ
என்னைப் பார்த்தபோது, இன்னும் நினைத்து
சி ரித்துக்கொள்வேன் யாழினி அங்காடியில்
கடவுள் வரமே கிடைத்தது போல் இன்னும் உணர்கிறேன், உடல் சிலிர்த்து….

இரவு முழுவதும் உறக்கம் இல்லை , நீயும்
என்னை நினைத்தாயா என்று தெரியவில்லை
ஊஞ்சலில் ஆடும் நிணைவுகள் போல்
என் ,மனதில் எப்பொழுதும் நீ…

காலையில் எழும் சூரியன் ஆனேன் உன் முகம் காண
உந்தன் விழிபடும் இடத்தில் இருக்கை மாற்றினேன்
நாட்டிய நடைக்காக உனைத் தொடர்ந்து வந்தேன்
உன் பொற்கரம் பட்ட தேர்வுத்தாளை தேர்ந்தெடுத்தேன்
என் கரம் அதில் பொருத்தி அதிசயித்தேன் …….

உன்னைக்கான வேண்டி காலந்தாழ்த்தாமல் தினமும்
காத்திருந்தேன் பேருந்து நிறுத்தத்தில்
கண்டும் காணாமல் நீ என்னை கடந்து சென்றாய்
எனினும் என்னுடன் நடைபோடத் துடிக்கும் உன் கால்கள் ….

தினம்தோறும் விரும்பி வந்தேன்
விடுப்பு எடுக்காமல் வகுப்புகளுக்கு
நீயும் வந்தாய் என் மனம் தெரிந்து …..

உன்னை அலைகழிக்கும் அறிவியல் ஆசிரியரை
இன்னும் நினைத்தாலும் கோபம் வரும்
நீ வாங்கிய பிரம்படிகள்,பேச்சுக்கள் என்னையும்
மனம் நோகச் செய்தனவே! இதுதான்
என்னுள் நீ கலந்தாய் என்பதா….

குயில் குரல் கேட்க எண்ணி, தேடி அலைந்தேன்
உன் வீடு போன் நம்பருக்காக yellow directory ல்
தெரிந்து கொண்டேன் உனக்கொரு தம்பி என்று
அவனிடம் அறிந்து கொண்டேன் , நேர்த்தியாய்
டயல் செய்து மகிழ்ந்தேன், உன் குரல் மட்டும் கேட்டேன் சங்கீதமாய்
நீயும் என்னை ரசித்திருப்பாய் என……..

பள்ளிச் சன்னலோரம் பார்துக்கிடந்தேன்,
என் பாவை முகம் காண
பல முறை கேட்டார்கள் இது ஒரு தலைக்காதலா என்று,
இல்லை என்று நிச்சயம் சொன்னேன் நீயும் என்னை செய்தாய் காதல் என்று….

என்னிடம் ஆழப்பதிந்த ரவிவர்மன் ஓவியம் ஆனாயடி நீ
கண்ணாடி முன்னின்று எந்தன் காதல் சொல்லிப் பார்த்தேன்
நீயும் பிம்பம் போல் என்முன் தோன்ற…
மயக்கத்தில் நானும் மிதந்தேன் மதிகேட்டவனாய்.
மறந்து தொலைத்தேன் உன்னிடம் பிரிவென்ற வார்த்தையை …….

வாழ்கையில் என்றும் வேண்டாத இறுதி நாட்களும் வந்தது
வலிகளுடன் எதிர்கொண்டேன் நீ இல்லாத நாட்களை
உன்னைக் காணமல் அழும் என் கண்கள்
உந்தன் கால்தடம் தேடும் என் கால்கள்
தேடியும் வந்தேன் உன் வீட்டுப் பக்கத்தில் ….

இறுதித்தேர்வுகள் முடிந்து சென்றது,இனியும் பொறுக்கக் கூடாதென
என் காதல் சொல்ல நானும் வந்தேன் கடிதங்களுடன்
காலங்களின் மயக்கம் என்றே நானும் விலகி நின்றேன்
திரும்பும் திசையெல்லாம் நீதான் தெரிந்தாய்….

முடிவுகள் வெளியானது,முதல் வகுப்பில் இருவரும் தேர்வானது
இன்னும் இமைகளில் இருக்கின்றன என் காதலியே
இனிப்புகளை வழங்கியதும் இமைகளில் நீரைத் தேக்கியதும்
காலங்கள் சொல்லும் நான் உன்னைக் காதலித்தேன் என ….

தனிமையில் அழுதேன் உன்னை மறக்க முடியாமல்
வாழ்வும் கசந்தது, வயதும் சென்றது
நினைவுகளால் என்னை நீயும் தொடர்ந்தாய்
எந்தன் மனம் முழுவதும் மாறாமல் நிறைந்திருந்தாய்
எந்நாளும் உனை மறக்க முடியாது என் தேவதையே….

கல்லூரிக் காலங்கள் ஒரு இடைவெளியானது நமக்குள்
இடைவெளி அன்பை உருவாக்கிற்று மென்மேலும்
கண்டுகொண்டேன் உன் கல்லூரியினை
காண வந்தேன் பல நாள் கழித்து
பார்த்துக்கொண்டே இருந்தோம் பலமணி நேரம்
இன்னும் நம் காதல் சொல்லாமல் ……………

குறுஞ்செய்தி அனுப்பி பகிர்ந்து கொண்டோம்
நம் வாழ்க்கை பாதைகளில் நடந்தவை நடப்பவை பற்றி
தூரம் சென்றேன் என் லட்சியம் தேடி
தொலைவில் இருந்தேன் உன் குரல் கேளாமல்
பிரிவாய் உணர்த்தேன் உன் முகம் காணாது
ஒரு நாள் பிரிந்தோம் பேசாது…
என் கணக்குகள் யாவின் கடவுச்சொல் ஆனாயடி நீ

உன்னை காண ஏங்கி நிற்கிறேன் தினம்தோறும்
வேலைச் சுமையால் நீயும் மறுத்தாய்
மனதும் தவித்தேன் உன் மாற்றமும் வெறுத்தேன்
ஆயினும் என்றும் எப்பொழுதும் சொல்வேன்

உன்னைப்போன்ற பெண்ணைப் பார்க்கும் பொழுது’
எனக்கும் ஒரு தோழி என் பேரழகி என
எந்தன் வாழ்க்கைப் பயணத்தில் என்றும் வெற்றிக்கொடி நீ என்று
கனவுகளில் நினைவுகளில் எத்தனை பெண்கள் வந்தாலும்
என் நினைவில் வரும் முதல் கணிகை என்றுமே நீ !!!
உன் நினைவுகளில் நானும் கலந்திருப்பேன் என்று……

License

கவிதையும் காதலே! Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.